இந்திய ‘ஏ’ அணி வீரர் சுப்மான் கில் இரட்டை சதம்

இந்திய ‘ஏ’ அணி வீரர் சுப்மான் கில் இரட்டை சதம் விளாசினார்.
இந்திய ‘ஏ’ அணி வீரர் சுப்மான் கில் இரட்டை சதம்
Published on

கிறைஸ்ட்சர்ச்,

கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான முதலாவது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 346 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய ஏ அணி 3-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது மற்றும் கடைசி நாளான நேற்று இந்திய ஏ அணி பேட்ஸ்மேன்கள் பட்டையை கிளப்பினர். பிரியங் பன்சால் 115 ரன்களில் (7 பவுண்டரி, 6 சிக்சர்) கேட்ச் ஆனார். சுப்மான் கில் இரட்டை சதமும் (204 ரன், 22 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் ஹனுமா விஹாரி சதமும் (11 பவுண்டரி, 3 சிக்சர்) அடித்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்திய ஏ அணி 101.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 448 ரன்கள் எடுத்திருந்த போது இந்த ஆட்டம் டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது நான்கு நாள் டெஸ்ட் போட்டி வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com