சிஏஏ விவகாரத்தில் பொறுப்பற்ற முறையில் பதில் சொல்ல விரும்பவில்லை - விராட் கோலி

சிஏஏ விவகாரத்தில் பொறுப்பற்ற முறையில் பதில் சொல்ல விரும்பவில்லை என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
சிஏஏ விவகாரத்தில் பொறுப்பற்ற முறையில் பதில் சொல்ல விரும்பவில்லை - விராட் கோலி
Published on

கவுகாத்தி,

மலிங்கா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-இலங்கை இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி நகரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது.

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமில் போராட்டம் நடந்ததால் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதன் எதிரொலியாக ரஞ்சி கிரிக்கெட், ஐ.எஸ்.எல் கால்பந்து, 19 வயதுக்குட்பட்டோருக்கான உள்ளூர் ஆட்டங்கள் பாதிக்கப்பட்டன. ஆனால் இப்போது அமைதி திரும்பி விட்டது.

இந்நிலையில், இந்தியா - இலங்கை போட்டி குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய கேப்டன் விராட் கோலியிடம் சிஏஏ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இது குறித்து அவர் கூறியதாவது:-

சிஏஏ விவகாரத்தில் நான் பொறுப்பற்ற முறையில் பதில் சொல்ல விரும்பவில்லை. ஒரு விஷயத்தைப் பற்றி கருத்து சொல்ல விரும்பினால், அது குறித்து சாதக, பாதகங்களை தெரிந்திருக்க வேண்டும்.

சிஏஏ என்றால் என்ன என்பது குறித்து எனக்கு முழுமையான புரிதல் வேண்டும். அப்படி புரிதல் இருந்தால் மட்டுமே என்னால் கருத்து கூற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com