லண்டனில் இந்திய தூதரக அதிகாரிகளுடன் இந்திய கிரிக்கெட் அணியினர் சந்திப்பு

Image Courtesy: @BCCI
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
லண்டன்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 5வது போட்டி வரும் 31ம் தேதி தொடங்குகிறது.
கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்ற நிலையில் இந்திய அணி ஆட உள்ளது. இந்த நிலையில், இந்தத் போட்டிக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், முன்னாள் தலைமைப் பயிற்சியாளரும் வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி மற்றும் அணி நிர்வாகிகள் லண்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளைச் சந்தித்தனர்.
அவர்களுக்கு வீரர்கள் கையொப்பமிட்ட பேட்டை இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இருவரும் பரிசளித்தனர். அப்போது அவர்கள் குழுவாகப் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களை பி.சி.சி.ஐ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.






