வங்காளதேசம் செல்லும் இந்திய கிரிக்கெட் அணி

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருப்பதாக வங்காளதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்திய அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருப்பதாக வங்காளதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 1, 3, 6-ந்தேதிகளில் ஒருநாள் போட்டிகளும் செப்டம்பர் 9, 12, 13-ந்தேதிகளில் டி20 போட்டிகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்திய அணி ஆகஸ்ட் 28-ந்தேதி வங்காளதேசம் சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது வங்காளதேசத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில், பிசிசிஐ இந்திய அணியை அனுப்ப சம்மதம் தெரிவிக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
Related Tags :
Next Story






