சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் ஓய்வு

image courtesy: instagram/iamsidkaul
இவர் கடைசியாக 2019-ம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார்.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான சித்தார்த் கவுல் (வயது 34) சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணிக்காக கடந்த 2018-ம் ஆண்டு அறிமுகம் ஆன இவர் தலா 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இவர் கடைசியாக 2019-ம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார். அதன்பின் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகளில் இடம்பிடித்து விளையாடியுள்ளார்.
Related Tags :
Next Story






