

மும்பை,
உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான ரஞ்சி டிராபி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தற்போது நடைபெற்று வருகிறது. (அக்டோபர் 15, 2025 முதல் பிப்ரவரி 28, 2026 வரை). குரூப் ஸ்டேஜ் போட்டிகள் முடிந்த நிலையில் காலிறுதி போட்டிகள் நாளை முதல் தொடங்க உள்ளது. காலிறுதியில் ஜார்கண்ட், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், பெங்கால், ஆந்திரா, மும்பை, கர்நாடகா ஆகிய 8 அணிகள் தகுதி பெற்றுள்ளன. அனைத்து காலிறுதி போட்டிகளும் பிப்ரவரி 6 முதல் 10, 2026 வரை (5 நாட்கள்) நடக்கவுள்ளது.
இந்நிலையில் மும்பை அணியின் முக்கிய பேட்ஸ்மேன் சர்ப்ராஸ் கான் வைரல் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் காலிறுதி போட்டியில் விளையாடுவது சந்தேகம் என தெரியவந்துள்ளது. அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றாலும், முழுமையாக குணமடைய 3-4 நாட்கள் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்ப்ராஸ் கான் இல்லாததால் மும்பை அணி சற்று் பின்னடைவை சந்தித்துள்ளது.