

சென்னை,
டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறன. சூப்பர் 8 சுற்றில் முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த இந்திய அணி நாளை ஜிம்பாப்வே அணியுடன் மோதுகிறது.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி சரியாக இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.
இந்த நிலையில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டிக்கு முன், இந்திய வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் அக்சர் படேல் சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.