உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதி போட்டியை பெரிய திரையில் கண்டு களித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்...!

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதி போட்டியை வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் கண்டு களித்தனர்.
Image Courtesy: BCCI twitter 
Image Courtesy: BCCI twitter 
Published on

டாக்கா,

22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்தது. 32 நாடுகள் கலந்து கொண்ட இந்த கால்பந்து திருவிழாவில் நேற்றிரவு லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் அரங்கேறிய மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் பலப்பரீட்சையில் இறங்கின.

இந்த போட்டியில் தொடக்கத்தில் இரு கோல்கள் அடித்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்த அர்ஜென்டினா அணி அடுத்தடுத்து இரண்டு கோல்களை விட்டுக்கொடுத்தது. இதனால் முழுநேர ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலை வகித்தது.

இதையடுத்து வெற்றியாளரை தேர்ந்தெடுக்க கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இதிலும் அர்ஜென்டினா முதல் கோலை அடித்து 3-2 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. ஆட்டம் முடிவுக்கு வரும் சமயத்தில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்வே மேலும் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார். இதனால் இறுதிப்போட்டி கூடுதல் நேரத்திலும் 3-3 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் முதல் வாய்ப்பை இரு அணிகளும் கோல் அடித்து அசத்தினர். இதையடித்து பிரான்ஸ் அணி தனது 2வது மற்றும் 3வது வாய்ப்பை நழுவ விட்டது. ஆனால் அர்ஜென்டினா அணி தனக்கு கிடைத்த வாய்ப்புகளை கோல் அடித்து அசத்தியது. பெனால்டி ஷீட் அவுட் முறையில் இரு அணிகளும் தலா 3 வாய்ப்புகள் முடிவில் அர்ஜென்டினா அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இதையடுத்து கிடைத்த 4வது வாய்ப்பை இரு அணிகளும் கோல் அடிக்க முடிவில் அர்ஜென்டினா அணி 4-2 என்ற கணக்கில் பிரான்சை வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது. இந்த இறுதிபோட்டியை காண வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி அங்கு அமைக்கப்பட்டிருந்த பெரிய திரையில் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தை இந்திய கிரிக்கெட் வீரர்கள் மகிழ்ச்சியாக கண்டு களித்தனர். அதை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிசிசிஐ அதற்கு 'பதட்டமான முடிவு' என பதிவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com