

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணியில் இடம் பெற்ற ஷிகர் தவான் காயத்தினால் விலகினார். அவருக்கு பதிலாக ரிஷப் பன்ட் அணியில் சேர்க்கப்பட்டார். இதேபோன்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கு காலில் காயம் ஏற்பட்டது. அவரது காயம் விரைவில் குணமடையும் என மருத்துவர்கள் கூறினர்.
இதனால் அணியில் புவனேஷ்வர் குமார் தொடருவார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருந்தது. காயத்தினால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடவில்லை. இந்நிலையில் காயம் குணமடைந்து அவர் வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ளார். வருகிற 27ந்தேதி நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்காக அவர் பயிற்சி மேற்கொண்டார்.
இதுபற்றிய புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் அதிக மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவருடன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆல் ரவுண்டர்களான விஜய் சங்கர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர்.