இந்திய ஆக்கி வீரர் குர்ஜந்த் சிங் ஓய்வு

சுமார் 10 வருடங்களாக இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.
இந்திய ஆக்கி வீரர் குர்ஜந்த் சிங் ஓய்வு
Published on

புதுடெல்லி,

ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய அணியில் இரண்டு முறை இடம் பிடித்திருந்த முன்கள வீரர் குர்ஜந்த் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். 31 வயதான குர்ஜந்த் சிங் சுமார் 10 வருடங்களாக இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.

டோக்கியோவில் 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலும், 2024-ல் பாரீசில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலும் இந்தியா வெண்கல பதக்கம் வென்றது. இந்தியா பதக்கம் வென்ற இந்த இரண்டு ஒலிம்பிக் போட்டியிலும் குர்ஜந்த் சிங் இடம் பிடித்திருந்தார். குர்ஜந்த் சிங் இந்திய அணிக்காக 130 போட்டிகளில் விளையாடி 33 கோல்கள் அடித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com