அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் இந்திய வீராங்கனை திடீர் ஓய்வு அறிவிப்பு


அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் இந்திய வீராங்கனை திடீர் ஓய்வு அறிவிப்பு
x

image courtesy:BCCI

இவர் இந்திய அணிக்காக கடைசியாக 2020 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடினார்.

மும்பை,

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனான வேதா கிருஷ்ணமூர்த்தி (வயது 32) அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார். இந்திய அணிக்காக 48 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 829 ரன்களும், 76 டி20 போட்டிகளில் விளையாடி 875 ரன்களும் அடித்துள்ளார்.

2017 மகளிர் ஒருநாள் மற்றும் 2020 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். இவர் கடைசியாக இந்திய அணியில் 2020 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடினார். அதன்பின் இந்திய அணியில் இடம்பெறவில்லை. அந்த சூழலில் 32 வயதான அவர் தற்போது ஓய்வை அறிவித்துள்ளார்.

1 More update

Next Story