லங்கா பிரிமீயர் லீக்கில் இந்திய வீரர்கள்..? - வெளியான தகவல்

லங்கா பிரீமியர் லீக் தொடரில் முதல் முறையாக இந்திய வீரர்கள் பங்கேற்கவுள்ளதாக அந்த தொடரின் ஏற்பாட்டாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image Courtesy: X (Twitter / File Image)
Image Courtesy: X (Twitter / File Image)
Published on

கொழும்பு,

இலங்கையில் நடத்தப்படும் லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரின் 6-வது சீசன் வருகிற டிசம்பர் 1 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. 5 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் மொத்தமாக 24 போட்டிகள் நடத்தப்படும். 20 லீக் போட்டிகளும், 4 நாக் அவுட் சுற்றுப் போட்டிகளும் இதில் அடங்கும். இலங்கையில் உள்ள மூன்று திடல்களில் போட்டிகள் அனைத்தும் நடத்தப்படும்.

இந்த நிலையில், லங்கா பிரீமியர் லீக் தொடரில் முதல் முறையாக இந்திய வீரர்கள் பங்கேற்கவுள்ளதாக அந்த தொடரின் ஏற்பாட்டாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.ன்இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முதல் முறையாக லங்கா பிரிமீயர் லீக் தொடரில் இந்திய வீரர்கள் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்த வீரர்கள் இணைய உள்ளார்கள் என்பது குறித்த தகவலை விரைவில் வெளியிடுவோம். லங்கா பிரிமீயர் லீக் தொடரில் இந்திய வீரர்கள் இணையவுள்ளனர் எனத் தெரிந்ததும் இலங்கையில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர்.

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இளம் வீரர்கள், அனுபவம் வாய்ந்த சர்வதேச வீரர்களுடன் இணைந்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்வதற்கு உதவியாக இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com