ஐபிஎல்: வெற்றிப் பாதைக்கு திரும்புமா மும்பை? ... ஐதராபாத்துடன் இன்று பலப்பரீட்சை

மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.
ஐபிஎல்: வெற்றிப் பாதைக்கு திரும்புமா மும்பை? ... ஐதராபாத்துடன் இன்று பலப்பரீட்சை
Published on

மும்பை,

19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 41-வது லீக் ஆட்டத்தில், இன்று (ஏப்ரல் 29) மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

நடப்பு தொடரில் இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை அணி, 2 வெற்றி, 5 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது. சென்னைக்கு எதிரான கடந்த போட்டியில் 103 ரன் வித்தியாசத்தில் அடைந்த படுதோல்வி அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

மறுபுறம், 8 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் எழுச்சி பெற்றுள்ள ஐதராபாத் அணி அபாரமான பார்மில் உள்ளது. இரு அணிகளும் இதுவரை 25 முறை மோதியுள்ளன. இதில் மும்பை 15 முறையும், ஐதராபாத் 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஐதராபாத்துக்கு எதிரான கடந்த 3 மோதல்களில் மும்பை வென்றுள்ளது அந்த அணிக்கு கூடுதல் பலம்.

Also Read
ஐசிசி டி20 தரவரிசை: ஸ்ரீசரனி அதிரடி... மந்தனா சறுக்கல்
ஐபிஎல்: வெற்றிப் பாதைக்கு திரும்புமா மும்பை? ... ஐதராபாத்துடன் இன்று பலப்பரீட்சை

வான்கடே மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால், இன்றைய போட்டியில் ரன் மழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரிவில் இருந்து மீண்டு மும்பை வெற்றிப் பாதைக்கு திரும்புமா அல்லது ஐதராபாத் தனது வெற்றிப் பயணத்தைத் தொடருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com