2024ம் ஆண்டின் சிறந்த வீரராக இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் தேர்வு

2024ம் ஆண்டின் சிறந்த வீரராக இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
image courtesy: AFP
image courtesy: AFP
Published on

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. ஆண்டு முழுவதும் வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்ட விதத்தை கணக்கில் கொண்டு இந்த கவுரவத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அந்த வகையில், 2024-ம் ஆண்டிற்கான சிறந்த வீரர் விருதுக்கு 4 வீரர்களின் பெயர்களை ஐ.சி.சி. பரிந்துரைத்திருந்தது. அதில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட், இங்கிலாந்தை சேர்ந்த ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இவர்களில் 2024-ம் ஆண்டின் சிறந்த வீரராக இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பும்ரா கடந்த ஆண்டு மிகச்சிறப்பான செயல்பாட்டினை வெளிப்படுத்தி இருந்தார். அதனால் அவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு ஆண்டின் சிறந்த வீரருக்கு வழங்கப்படும் சர் கார்பீல்ட் சோபர்ஸ் விருது வழங்கப்பட உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com