

மும்பை,
இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தந்தை ஆனார். சூர்யகுமார்-தேவிஷா ஷெட்டி தம்பதிக்கு மும்பையில் நேற்று முன்தினம் அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த தம்பதிக்கு இது முதல் குழந்தையாகும். குழந்தையை வரவேற்று சூர்யகுமார் யாதவ் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், 'அள வில்லா மகிழ்ச்சி, மற்றும் விசாலமான கனவுகளுடன் எங்களது பெண் குழந்தையை சிரம் தாழ்ந்து வரவேற்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ் கடந்த ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா முதுகுவலி கார ணமாக ஆடாததால் கேப்டன் பொறுப்பை கவனித்தார். தற்போது மனை வியை அருகில் இருந்து கவனித்து வரும் சூர்யகுமார் யாதவ் ராய்ப்பூரில் நாளை நடைபெறும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது.