#T20WorldCup டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ளது.
#T20WorldCup டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிப்பு
Published on

மும்பை,

நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 20 அணிகள் பங்கேற்கும் 10-வது ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங்கை இணைந்து நடத்துகின்றன. அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி 7-ந்தேதி தொடங்கி மார்ச் 8-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.

இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, முதல் முறையாக தகுதி பெற்றுள்ள இத்தாலி உள்பட 20 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெறும்.

ஒரு மாதத்திற்கு முன்பே உலகக் கோப்பை தொடருக்கான தங்களது அணியை முன்கூட்டியே ஒவ்வொரு கிரிக்கெட் வாரியமும், சமர்பிக்க வேண்டும்

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ளது. அதன்படி  தேர்வுக் குழு தலைவர் அகர்கர் தலைமையில் நாளை ஆலோசனை நடைபெற உள்ளது.ஆலோசனையில் இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கம்பீரும் பங்கேற்க உள்ளார். ஆலோசனை நிறைவடைந்த பிறகு இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது.

2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியா விளையாடும் போட்டி அட்டவணை:

இந்தியா - அமெரிக்கா: பிப்ரவரி 7 (மும்பை )

இந்தியா - நமீபியா: பிப்ரவரி 12 (டெல்லி)

இந்தியா - பாகிஸ்தான்: பிப்ரவரி 15 - (கொழும்பு )

இந்தியா - நெதர்லாந்து : பிப்ரவரி 18 (அகமதாபாத் ) .

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com