ஐ.சி.சி. முடிவுக்கு இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கம்பீர் ஆதரவு

முடிவை பெறுவதற்கான வாய்ப்பை எப்போதும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஐ.சி.சி. முடிவுக்கு இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கம்பீர் ஆதரவு
Published on

மும்பை,

டெஸ்ட் போட்டிகளில் மோசமான வானிலையால் போதிய வெளிச்சம் இன்றி பாதிக்கப்படுவதை தவிர்க்கும் வகையில் அந்த சமயத்தில் இரு அணிகளின் அனுமதியுடன் சிவப்புநிற பந்துக்கு பதிலாக இளஞ்சிவப்பு நிற பந்தை (பிங்க் பந்து) பயன்படுத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பரிசோதனை அடிப்படையில் ஒப்புதல் அளித்துள்ளது. ஐ.சி.சி.யின் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர்,

'இதை நான் விரும்புகிறேன். ஏனெனில் ஒரு டெஸ்டில் முடிவை பெறுவதற்கான வாய்ப்பு இருந்தால் அந்த வாய்ப்பை எப்போதும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. அந்த வகையில் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது' என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com