இங்கிலாந்து சென்ற இந்திய டெஸ்ட் அணி - வீடியோ பகிர்ந்த பி.சி.சி.ஐ

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
Image Courtesy: @BCCI
Image Courtesy: @BCCI
Published on

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2025-27) தொடரின் அங்கமாக நடைபெற உள்ளதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த தொடர் வருகிற 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனான சுப்மன் கில்லின் முதல் சோதனை இது என்பதால் அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்பதற்காக சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இரு தினங்களுக்கு முன்னர் இங்கிலாந்து புறப்பட்டது. தற்போது இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. இது தொடர்பான வீடியோவை பி.சி.சி.ஐ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com