இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு பத்மஸ்ரீ விருது

113 பத்மஸ்ரீ விருதுகள் என மொத்தம் 131 விருதுகளை உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு பத்மஸ்ரீ விருது
Published on

புதுடெல்லி,

கலை, இலக்கியம், சமூக சேவை, மருத்துவம், அறிவியல் போன்றவற்றுக்காக வழங்கப்படும் நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதுகளில் ஒன் றான பத்ம விருதுகள், ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்துக்கு முந்தைய தினம் அறிவிக் கப்படுகிறது.

இதன்படி இந்த ஆண்டும் அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு 5 பத்ம விபூஷண் விருதுகள், 13 பத்மபூஷண் விருதுகள் மற்றும் 113 பத்மஸ்ரீ விருதுகள் என மொத்தம் 131 விருதுகளை உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

இந்த விருதுகளை வழங்கும் முதல்கட்ட விழா டெல்லியில், ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலை நடைபெற்றது. விருதுகளை ஜனாதிபதி திர வுபதி முர்மு வழங்கினார்.

பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரது முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட மந்திரிகள், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு. பத்மஸ்ரீ வழங்கப்பட்டது.ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்மஸ்ரீ விருதை வழங்கினார்.

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com