லாரியஸ் விருதுக்கான போட்டியில் இந்திய மகளிர் அணி

மகளிர் உலகக் கோப்பையை கைப்பற்றி சரித்திரம் படைத்த இந்திய அணியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
லாரியஸ் விருதுக்கான போட்டியில் இந்திய மகளிர் அணி
Published on

புதுடெல்லி,

ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனைகள் மற்றும் அணிகளுக்கு லாரியஸ் உலக விளையாட்டு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் அடுத்த மாதம் 20-ந்தேதி நடக்கிறது. இதில் ஆண்டின் சிறந்த அணிக்கான போட்டியில் கிரிக்கெட்டில் மகளிர் உலகக் கோப்பையை கைப்பற்றி சரித்திரம் படைத்த இந்திய அணியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதே போல் பெண்கள் ஐரோப்பிய கால்பந்து கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி, பார்முலா1 கார்பந்தயத்தில் மகு டம் சூடிய மெக்லரன் உள்ளிட்ட மேலும் 5 அணிகளும் இதற்கான போட்டி யில் இடம் பெற்றுள்ளன. இவற்றில் இருந்து ஒரு அணி விருதுக்கு தேர்வு செய்யப்படும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com