ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்தியர்கள்...விவரம்

இறுதிப்போட்டியில் ஜொலிப்பது என்பது சதாரண விஷயமல்ல.
மும்பை,
13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம், மும்பை புறநகரான நவிமும்பையில் உள்ள டி.எஸ். பட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் தங்களது முதல் மகுடத்துக்காக இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மல்லுக்கட்டின. மழை காரணமாக ஆட்டத்தை தொடங்க 2 மணி நேரம் தாமதம் ஆனது. ஆனாலும் ஓவர் ஏதும் குறைக்கப்படவில்லை. இரு அணியிலும் அரையிறுதியில் ஆடிய வீராங்கனைகள் மாற்றமின்றி அப்படியே இடம் பெற்றனர். இதில் டாஸ் ஜெயித்த தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷபாலி வர்மா 87 ரன்களும், தீப்தி ஷர்மா 58 ரன்களும் அடித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அயாபோங்கா காகா 3 விக்கெட் கைப்பற்றினார். பின்னர் இறுதிப்போட்டியில் இதுவரை யாரும் விரட்டிப்பிடிக்காத ஒரு இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 45.3 ஓவர்களில் 246 ரன்களில் சுருட்டினர். இதன் மூலம் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக உலகக் கோப்பையை தட்டித்தூக்கியது.
உலகக்கோப்பைஇறுதிப்போட்டி என்றாலே மிகுந்த அழுத்தம் இருக்கும். மற்ற போட்டிகளை விட இறுதிப்போட்டியில் ஜொலிப்பது என்பது சாதரண விஷயமல்ல. அதன்படி, இந்திய அணிக்காக ஆண்கள் மற்றும் பெண்கள் உலகக்கோப்பை ஒருநாள் இறுதிப்போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலை காண்போம்,
*ஷபாலி வர்மா - 87 ரன்கள்
இந்திய மகளிர் அணியில் அதிக ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
*கிறிஸ் ஸ்ரீகாந்த் - 38 ரன்கள்
1983 ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்திய அணி (ஆண்கள்) சாம்பியன் பட்டம் வென்றது.
*கம்பீர் - 97 ரன்கள்
*தோனி - 91 ரன்கள்
2011 ஆம் ஆண்டு இலங்கையை வீழ்த்தி இந்திய ஆண்கள் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி கம்பீர் மற்றும் தோனி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனர்.
*புனம் ரவுத் - 86 ரன்கள்
2017 ஆம் ஆண்டு இந்திய மகளிர் அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது. இருப்பினும் இந்திய வீராங்கனை புனம் ரவுத் சிறப்பாக விளையாடி இருந்தார்.
*சேவாக் - 82 ரன்கள்.
2003 ஆம் ஆண்டு இந்திய ஆண்கள் அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது இந்த போட்டியில் சேவாக் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்தார்.






