ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகள்: யாரும் செய்யாத வரலாற்று சாதனையை படைத்த இந்தோனேசியா வீரர்

சர்வதேச கிரிக்கெட்டில் கெடே பிரியந்தனா ஒரு ஓவரில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகள்: யாரும் செய்யாத வரலாற்று சாதனையை படைத்த இந்தோனேசியா வீரர்
Published on

புதுடெல்லி,

சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தோனேசியா வீரர் கெடே பிரியந்தனா வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்தோனேசியா கம்போடியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி பாலி நகரில் நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தோனேசிய அணி 168 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 169 ரன்கள் இலக்குடன் விளையாடிய கம்போடியா அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது 16 வது ஓவரை வீசிய கெடே பிரியந்தனா, அந்த ஓவரில் முதல் 3 பந்துகளில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 4 வது பந்தில் விக்கெட் வீழ்த்தவில்லை. 5வது மற்றும் 6வது பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தோனேசியா அணியை வெற்றி பெற செய்தார்.

இதனால் சர்வதேச கிரிக்கெட்டில் கெடே பிரியந்தனா ஒரு ஓவரில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

முன்னதாக நட்சத்திர பந்துவீச்சாளர்களான மலிங்கா , ரஷீத் கான் ஆகியோர் ஒரு ஓவரில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்த நிலையில், கெடே பிரியந்தனா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி கவனம் பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com