காயத்தால் பாதிப்பு - டெல்லி அணியில் இருந்து ரபடா விலகல்

காய பாதிப்பு காரணமாக டெல்லி அணியில் இருந்து ரபடா விலகினார்.
காயத்தால் பாதிப்பு - டெல்லி அணியில் இருந்து ரபடா விலகல்
Published on

கேப்டவுன்,

உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலரான தென்ஆப்பிரிக்காவின் காஜிசோ ரபடா சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மொத்தம் 23 விக்கெட்டுகள் சாய்த்து தொடர்நாயகன் விருதை பெற்றார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டின் 2-வது இன்னிங்சின் போது, ரபடா முதுகின் அடிப்பகுதியில் வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் காயம் குணமடைய மூன்று மாதங்கள் வரை ஆகும் என்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து விலகியுள்ளார். 22 வயதான ரபடாவை டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரூ.4.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com