காயத்தால் அவதி: ஐ.பி.எல் கிரிக்கெட்டில் பெரும்பாலான ஆட்டங்களை தவற விடும் தீபக் சாஹர்

15-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி வருகிற இந்த மாதம் 26-ந்தேதி தொடங்க இருக்கிறது.
காயத்தால் அவதி: ஐ.பி.எல் கிரிக்கெட்டில் பெரும்பாலான ஆட்டங்களை தவற விடும் தீபக் சாஹர்
Published on

புதுடெல்லி,

15-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரை ரூ.14 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்தது. வருகிற 26-ந்தேதி ஐ.பி.எல். தொடங்க உள்ள நிலையில் தீபக் சாஹர் காயத்தில் சிக்கியிருப்பது சென்னை அணி நிர்வாகத்தை கவலை அடையச் செய்துள்ளது.

கடந்த மாதம் 20-ந்தேதி கொல்கத்தாவில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியின் போது அவருக்கு வலது கால் தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. பரிசோதனையில் தசைநார் கிழிந்து இருப்பது தெரியவந்தது.

இந்த காயம் குணமடைய குறைந்தது 8 வார காலம் ஆகும் என்றும், அதனால் அவர் ஐ.பி.எல்-ல் பாதிக்கு மேற்பட்ட ஆட்டங்களை தவற விடுவார் என்றும் கிரிக்கெட் வாரிய நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com