கொரோனா பாதிப்பு: இந்தியாவுக்கு நிதியுதவி அளித்த பிரட் லீ!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரட் லீ, கொரோனா பிடியில் சிக்கியுள்ள இந்தியாவுக்காக 41 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி, 

இந்தியாவில் கடந்த வாரம் முதல் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டல் மரணங்கள் நடந்து வருகின்றன. 

இந்நிலையில், இந்தியாவிற்கு முன்னாள் ஆஸ்திரேலியா வேக பந்து வீச்சாளர் பிரட் லீ ரூ.41 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில், இந்தியா எப்போதுமே எனக்கு இரண்டாவது தாய் வீடு போல இருந்துள்ளது. நான் கிரிக்கெட்டில் இருந்த போதும், ஓய்வு பெற்ற பின்னரும் கூட இந்த நாட்டு மக்களிடமிருந்து எனக்குக் கிடைத்த அன்பும் பாசமும் என் இதயத்தில் ஒரு சிறந்த இடத்தைப் பிடித்துள்ளது.

இந்திய மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு துன்பப்படுவதை பார்க்கும்போது மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் பொருட்களை வாங்குவதற்கு உதவுவதற்காக 1 பிடிசி (பிட்காயின்) (இந்திய மதிப்பில் ரூ. 41,02,258) நன்கொடை அளிக்கிறேன். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கொரோனா தொற்றை ஒழிக்க வேண்டும். முன்களபணியாளர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமை பெற்றிருக்கிறேன் என்று பிரட் லீ பதிவிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் பி.எம். கேர்ஸ் நிதிக்கு 37 லட்ச ரூபாய் நன்கொடை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com