

சென்னை,
19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கி மே 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 10 அணிகள் பங்கேற்க உள்ளன.
இந்நிலையில், கடந்த 18 ஐபிஎல் தொடர்களில் இடம்பெற்ற சுவாரசிய தகவல்களை இங்கு காண்போம்.
பங்கேற்ற அணிகள் - 15
வீரர்கள் - 772 பேர்
ஆட்டங்கள் - 1,170
ரன்கள் - 3,73,851
விக்கெட்டுகள் - 13,776
சதங்கள் - 110
அரைசதங்கள் - 1,834
டக் அவுட் (0 ரன்கள்) - 1,404
பவுண்டரிகள் - 32,055
சிக்சர்கள் - 14,321
இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் - 37 முறை
இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் - 202 முறை
மெய்டன்கள் - 351
எக்ஸ்டிராக்கள் - 18,887
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை 58 வீரர்கள் இணைந்து 110 சதங்கள் அடித்துள்ளனர். இவற்றில் 83 சதங்கள் வெற்றியிலும், 27 சதங்கள் தோல்வியிலும் முடிந்துள்ளன.
வலது கை பேட்டர்கள் 73 சதங்களும், இடக்கை பேட்டர்கள் 37 சதங்களும் விளாசியுள்ளனர்.
கேப்டன்ஷிப்பில் அடித்த சதங்களின் எண்ணிக்கை 16. விக்கெட் கீப்பர்கள் எடுத்த சதங்கள் 13.
அதிக சதங்கள் அடித்த அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு திகழ்கிறது. அந்த அணியை சேர்ந்த வீரர்கள் இதுவரை 19 சதங்கள் விளாசியுள்ளனர். 2-வது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் (18 சதம்) உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த வீரர்கள் 10 சதங்களை விளாசியுள்ளனர்.
தற்போது விளையாடும் அணிகளில் குறைந்த சதங்கள் அடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். மொத்தமே 3 சதங்கள் தான் அடித்துள்ளது. ஆனால் கொல்கத்தா 3 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
அதிக சதங்கள் எடுத்த வீரர் பட்டியலில் பெங்களூரு வீரர் விராட் கோலி 8 சதங்களுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். 2வது இடத்தில் 7 சதங்களுடன் பட்லர் (தற்போது குஜராத்) உள்ளார்
2013-ம் ஆண்டில் புனே வாரியர்சுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி வீரர் கிறிஸ் கெயில் 175 ரன்கள் குவித்ததே தனிநபர் அதிகபட்சமாக நீடிக்கிறது. இந்த ஆட்டத்தில் கிறிஸ் கெயில் 30 பந்துகளில் சதம் விளாசினார்.
அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள்
கிறிஸ் கெயில் - 357
ரோகித் சர்மா - 302
விராட் கோலி 291
எம்எஸ் தோனி - 264
ஏபி டி வில்லியர்ஸ் - 251
அதிக ரன்கள் அடித்த வீரர்கள்:
விராட் கோலி - 8,661
ரோகித் சர்மா - 7,046
ஷிகர் தவான் - 6,769
டேவிட் வார்னர் - 6,565
சுரேஷ் ரெய்னா - 5,528
ஐபிஎல் கோப்பையை வென்ற அணிகள்:-
சென்னை சூப்பர் கிங்ஸ் (2010, 2011,2018,2021,2023)
மும்பை இந்தியன்ஸ் (2013,2015,2017,2019,2020)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2012,2014,2024)
ராஜஸ்தான் ராயல்ஸ் (2008)
டெக்கான் சார்ஜர்ஸ் (2009)
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (2016)
குஜராத் டைட்டன்ஸ் (2022)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (2025)