சர்வதேச கிரிக்கெட்: 64 வயதில் அறிமுகம் ஆன வீராங்கனை

இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன 2-வது வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
image courtesy:twitter
image courtesy:twitter
Published on

துபாய்,

போர்ச்சுக்கல் - நார்வே இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் போர்ச்சுக்கல் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த தொடரில் போர்ச்சுக்கல் அணியில் ஜோனா சைல்ட் அறிமுக வீராங்கனையாக களமிறங்கினார். அவருக்கு வயது 64 ஆண்டுகள் 181 நாட்கள். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக வயதில் அறிமுகம் ஆன 2-வது வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்த தொடரில் பெரிய அளவில் அசத்தாத ஆல் ரவுண்டர் ஜோனா சைல்ட் பேட்டிங்கில் வெறும் 2 ரன்களும், பந்து வீச்சில் பெரிய அளவில் வாய்ப்பும் பெறவில்லை என்பது குறிப்ப்பிடத்தக்கது.

இந்த சாதனை பட்டியலில் ஜிப்ரால்டரைச் சேர்ந்த சாலி பார்டன் 66 வயதில், (66 ஆண்டுகள் மற்றும் 334 நாட்கள்) அறிமுகம் ஆகி முதலிடத்தில் உள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com