சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20: வாட்சன் சதம்.. தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி


சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20: வாட்சன் சதம்.. தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி
x

இதில் இன்று நடைபெறுகின்ற ஆட்டத்தில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

வதோதரா,

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஜாக் காலிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய தொடக்கம் முதலே அதிரடியில் பட்டையை கிளப்பியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன வாட்சன் மற்றும் பெர்குசன் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். பெர்குசன் 85 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த பென் டங்க் 16 பந்துகளில் 34 ரன்களில் விளாசினார். மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வாட்சன் 61 பந்துகளில் 122 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் குவித்தது.

பின்னர் 268 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 17 ஓவர்களில் 123 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்க அணியில் அம்லா 30 ரன்கள் அடிக்க, ஆஸ்திரேலியா தரப்பில் பென் லாப்லின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதில் இன்று நடைபெறுகின்ற ஆட்டத்தில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

1 More update

Next Story