சர்வதேச டி20 கிரிக்கெட்: மாபெரும் சாதனை படைத்த முஸ்தாபிசுர் ரஹ்மான்


சர்வதேச டி20 கிரிக்கெட்: மாபெரும் சாதனை படைத்த முஸ்தாபிசுர் ரஹ்மான்
x

Image Courtesy: @BCBtigers

17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய், அபுதாபியில் நடைபெற்று வருகிறது.

துபாய்,

17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய், அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 4 சுற்றுக்குள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் நுழைந்துள்ளன. இந்த சுற்றில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்நிலையில், ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றில் துபாயில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் இந்தியா, வங்காளதேசம் மோதி வருகின்றன். இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து இந்தியாவின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில், அபிஷேக் சர்மா களமிறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கில் 29 ரன்கள் அவுட் ஆனார். அடுத்து வந்த ஷிவம் துபே 2 ரன்னிலும், சூர்யகுமார் 5 ரன்னிலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். அதேவேளை அதிரடியாக ஆடிய தொடக்க வீரர் அபிஷேக் 37 பந்துகளில் 75 ரன்கள் குவித்து அவுட் ஆனார். பின்னர் வந்த திலக் வர்மா 5 ரன்னில் அவுட் ஆனார். மறுபுறம் பொறுப்புடன் ஆடிய ஹர்திக் பாண்ட்யா 29 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்தார்.

இறுதியில் இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது. வங்காளதேச தரப்பில் அந்த அணியின் ரிஷத் ஹசன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் வங்காளதேசம் ஆடி வருகிறது.

இந்த ஆட்டத்தில் வங்காளதேசத்தின் முஸ்தாபிசுர் ரஹ்மான் 1 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவரது விக்கெட் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்தது. இதன் மூலம் வங்காளதேச அணிக்காக அவர் மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வங்காளதேச அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஷகிப் அல் ஹசனை (149 விக்கெட்) பின்னுக்கு தள்ளி முஸ்தாபிசுர் ரஹ்மான் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

1 More update

Next Story