சர்வதேச டி20 கிரிக்கெட்: ஷகிப் அல் ஹசனின் மாபெரும் சாதனையை சமன் செய்த முஸ்தாபிசுர் ரஹ்மான்


சர்வதேச டி20 கிரிக்கெட்: ஷகிப் அல் ஹசனின் மாபெரும் சாதனையை சமன் செய்த முஸ்தாபிசுர் ரஹ்மான்
x

image courtesy:PTI

ஆசிய கோப்பையில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் முஸ்தாபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

துபாய்,

நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின்‘சூப்பர்4’ சுற்று நேற்று தொடங்கியது. இதில் துபாயில் நேற்று இரவு நடந்த முதலாவது ஆட்டத்தில் இலங்கை - வங்காளதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த வங்காளதேச அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தசுன் ஷனகா 64 ரன்கள் அடித்தார். வங்காளதேச அணி தரப்பில் முஸ்தாபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதனையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வங்காளதேச அணிக்காக முஸ்தாபிசுர் ரஹ்மான் 149 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் வங்காளதேச அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவரான முன்னாள் கேப்டன் ஷகிப் அல்-ஹசனின் (149 விக்கெட்) சாதனையை சமன் செய்தார்.

அந்த பட்டியல்:

1. ஷகிப் அல் ஹசன்/ முஸ்தாபிசுர் ரஹ்மான் - 149 விக்கெட்டுகள்

2. தஸ்கின் அகமது - 99 விக்கெட்டுகள்

3. மெஹதி ஹசன் - 61 விக்கெட்டுகள்

பின்னர் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேச அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சைப் ஹசன் 61 ரன்னும், தவ்ஹித் ஹிரிடாய் 58 ரன்னும் எடுத்தனர். இலங்கை தரப்பில் ஹசரங்கா, தசுன் ஷனகா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

1 More update

Next Story