ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி முதலில் பந்து வீச்சு

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. #IPL #IPL2018
ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி முதலில் பந்து வீச்சு
Published on

மும்பை,

11-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மாலை 4 மணிக்கு துவங்கும் 9-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் கம்பீர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

இதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. நடப்பு சாம்பியனாக இருந்த போதிலும், கடந்த 2 போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்தது, அந்த அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால், இன்றைய போட்டியில் வெற்றி பெற கடுமையாக மும்பை இந்தியன்ஸ் அணி போராடும் என தெரிகிறது. டெல்லி அணியும் வெற்றிக்கணக்கை துவங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com