ஐபிஎல் 11-வது சீசனுக்கான போட்டி அட்டவணை முழுவிவரம்

ஐபிஎல் 11வது சீசனுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது அதன் முழு விவரம் வருமாறு #IPL2018 #BCCI
ஐபிஎல் 11-வது சீசனுக்கான போட்டி அட்டவணை முழுவிவரம்
Published on

மும்பை 

ஐபிஎல் 11வது சீசனுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த சீசனின் முதல் போட்டியில் ஏப்ரல் 7ம் தேதி மும்பை அணியும், சென்னை அணியும் விளையாட உள்ளது.

கடந்த இரண்டு சீசனில் விளையாடாத சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை விளையாட உள்ளன. கடந்த சீசன் பைனலில் மும்பை - புனே அணிகள் மோதின. இந்த ஆண்டு புனே அணி இல்லாததால், புனேவில் இடம்பெற்றிருந்த தோனியின் அணியான சென்னை அணி முதல் போட்டியில் விளையாட உள்ளது.

இந்த சீசனில் நேரம் மாற்றப்பட்டு மாலை 5.30 மணி, இரவு 7 மணிகளில் ஆட்டங்கள் தொடங்கும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. போட்டி நேரத்தை மாற்றுவதற்கு அணிகளின் உரிமையாளர்களும், ஒளிபரப்பு நிறுவனத்தாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நேரத்தை மறுபடியும் ஐ.பி.எல். நிர்வாகம் மாற்றியுள்ளது. முந்தைய ஆண்டுகள் போலவே இரவு 8 மணிக்கு ஆட்டம் தொடங்கும். ஒரே நாளில் இரண்டு ஆட்டம் இடம்பெறும் போது ஒரு ஆட்டம் மாலை 4 மணிக்கு ஆரம்பமாகும்.

9 நகரங்களில் மொத்தம் 60 ஆட்டங்கள் நடக்கிறது. இதில் இறுதிப்போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் அரங்கேறுவதும் அடங்கும். அதே சமயம் 2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஐ.பி.எல். போட்டி திரும்புகிறது. சென்னையில் 7 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. இங்கு ஏப்ரல் 10ந்தேதி நடக்கும் முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com