ஐ.பி.எல் அதிக ரன் எடுத்த வீரர் சுரேஷ் ரெய்னா வீராட்கோலியை பின்னுக்கு தள்ளினார்

ஐ.பி.எல் வரலாற்றில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெருமையை மீண்டும் பெற்றார் சுரேஷ் ரெய்னா. #SureshRaina #ViratKohli
ஐ.பி.எல் அதிக ரன் எடுத்த வீரர் சுரேஷ் ரெய்னா வீராட்கோலியை பின்னுக்கு தள்ளினார்
Published on

மும்பை

நேற்றைய ஐ.பி.எல் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக அரை சதம் விளாசினார் சென்னை சூப்பர் கிங்ஸின் சுரேஷ் ரெய்னா. இதன் மூலம் 165 போட்டிகளில் விளையாடி, 4658 ரன்களை எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார். , ஐ.பி.எல் வரலாற்றில் அதிக ரன் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். அவருடைய சராசரி 34.25. ஒரு சதம் மற்றும் 32 அரைசதங்களை அவர் அடித்துள்ளார்.

முன்னதாக இந்த சீசனில் சென்னை அணிக்காக இரண்டு போட்டிகளில் விளையாடாததால், ரெய்னாவின் இடத்தை தற்காலிகமாக விராட் கோலி பிடித்திருந்தார். தற்போது அவரிடம் இருந்து அந்த சாதனையை மீட்டுள்ளார் ரெய்னா. விராட் 154 போட்டிகளில் 4649 ரன் எடுத்துள்ளார். சராசரி 38.10. நான்கு சதம், 32 அரைசதம் அடித்திருக்கிறார்.

ரெய்னாவுக்கும் கோலிக்கும் இடையே ரன் வித்தியாசம் மிகக் குறைவுதான். இந்த நிலையில், வருகிற 25ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இதனால், ரெய்னாவின் இடத்தை விராட் மீண்டும் பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. அதே சமயம் அந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ள ரெய்னா முயற்சி எடுப்பார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com