

பஞ்சாப்,
11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இரண்டாவது ஆட்டத்தில்
டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலில் பந்து வீச்சைத் தோவு செய்தார்.
இதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தொடக்க வீராகள் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த தவறினா.ஷ்ரேயஸ் ஐயர் 11(11), கொலின் மன்ரோ 4(6) மற்றும் விஜய் சங்கா 13(13) ரன்கள் எடுத்த நிலையில் பஞ்சாப் அணியின் சிறப்பான பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினர்.
இருப்பினும் மறுமுனையில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் கௌதம் கம்பீர் அற்புதமாக விளையாடி தன்னுடைய அரை சதத்தினை 55(42) பூர்த்தி செய்தார். இதனிடையே கம்பீர் 15 வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.
15 ஓவா முடிவில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 123 ரன்கள் எடுத்த நிலையில் 5 விக்கெட்டுகளை இழந்து தொடர்ந்து விளையாடி வருகிறது. .