

அபுதாபி,
துபாயில் நடைபெற்று வரும் 13வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 49வது ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயன் மார்கன் தலைமையினான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பதுவீச்சை தேர்வு செய்துள்ளார். சென்னை அணியில் இன்று டு ப்ளிசிஸ், இம்ரான் தாஹிருக்கு பதிலாக சேன் வாட்சன், லுங்கி இங்கிடி சேர்க்கப்பட்டுள்ளனர். ப்ளே ஆஃப் வாய்ப்பை சென்னை அணி ஏற்கனவே இழந்துள்ளது. புள்ளிப்பட்டியலில் அதிக மதிப்பெண்களை பெறும் முனைப்புடன் கொல்கத்தா அணி இன்று களம் காண்கிறது.