ஐபிஎல் 2023: புதிய சீருடையை வெளியிட்ட லக்னோ அணி...!

2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி தொடர் வரும் 31ம் தேதி தொடங்க உள்ளது.
Image Courtesy: Twitter 
Image Courtesy: Twitter 
Published on

லக்னோ,

2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி தொடர் வரும் 31ம் தேதி தொடங்க உள்ளது. 31ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்த வருடன் ஐபிஎல் தொடர் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் நடைபெற உள்ளது. அதனால் சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஐதரபாத் உள்ளிட்ட மைதானங்களில் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடர் தோனிக்கு கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என்பதால் சென்னை அணி சாம்பியன் பட்டம் வெல்ல கடுமையாக முயற்சிக்கும்.

இந்நிலையில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இந்த சீசனுக்கான புது சீருடையை வெளியிட்டுள்ளது. லக்னோ அணியின் புதிய சீருடையை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டார். 2022 இல் ராகுல் தலைமையிலான லக்னோ அணியானது பச்சை-நீல நிற ஜெர்சியை அணிந்திருந்த நிலையில், அவர்கள் இப்போது அடர் நீல நிற நிறத்துக்கு மாறியுள்ளனர்.

புதிய சீருடை வெளியீட்டு விழாவில் ரவி பிஷ்னோய், அவேஷ் கான், ஜெய்தேவ் உண்டகட், தீபக் ஹூடா மற்றும் கேப்டன் கேஎல் ராகுல் ஆகியோர் கலந்து கொண்டனர். பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, லக்னோ உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மற்றும் அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் ஆகியோரும் அணியினர் தங்கள் புதிய ஜெர்சியை வெளியிட்டனர்.

லக்னோ அணி கடந்த ஆண்டு ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது மற்றும் ராகுலின் தலைமையின் கீழ் 17 ஆட்டங்களில் ஒன்பதில் வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com