ஐபிஎல் 2023: சேவாக் தேர்வு செய்த டாப்-5 பேட்ஸ்மேன்கள் - கோலி, கில்லுக்கு இடம் இல்லை...சென்னை வீரருக்கு இடம்...!

ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை - குஜராத் அணிகள் நாளை அகமதாபாத்தில் மோத உள்ளன.
Image Courtesy: AFP/ INSTA- virendersehwag
Image Courtesy: AFP/ INSTA- virendersehwag
Published on

மும்பை,

கடந்த மார்ச்மாதம் தொடங்கிய 16வது ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோத உள்ளன.

சென்னையை வீழ்த்தி குஜராத் கோப்பையை தக்க வைக்குமா அல்லது குஜராத்தை வீழ்த்தி 5வது முறையாக சென்னை கோப்பையை வெல்லுமா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் டாப் 5 பேட்ஸ்மேன்களை சேவாக் தேர்வு செய்துள்ளார். இது அவர் தேர்வு செய்த டாப் 5 பேட்ஸ்மேன்கள் மட்டுமே. இது குறித்து அவர் கூறும் போது நான் அதிகப்படியான தொடக்க ஆட்டக்காரர்களை தேர்வு செய்யவில்லை. ஏனெனில் அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன.

நான் முதலாவதாக ரிங்கு சிங்கை தேர்வு செய்கிறேன். நான் இவரை முதலில் ஏன் தேர்வு செய்தேன் என யாரும் கேள்வி எழுப்ப மாட்டார்கள் என நினைக்கிறேன். ஏனெனில் இதற்கு முன்னர் 5 சிக்சர்களை அடித்து யாரும் அணியை வெற்றி பெறச்செய்யவில்லை என நினைக்கிறேன்.

இரண்டாவதாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷிவம் துபேவை தேர்வு செய்ட்கிறேன். அவர் 33 சிக்சர்களை அடித்துள்ளார். மேலும், அவரது ஸ்டிரைக் ரேட் 160 ஆக உள்ளது. அவருக்கு கடந்த சில சீசன்கள் எதிர்பார்த்த படி அமையவில்லை. ஆனால் இந்த வருடம் அருமையாக செயல்பட்டுள்ளார்.

மூன்றாவதாக தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். அவரது அருமையான பேட்டிங் திறமை என்னை அவரை எடுக்க வைத்தது. இதையடுத்து 4வதாக சூர்யகுமார் யாதவ். ஏனெனில் அவர் ஐபிஎல் தொடங்கும் போது சிறந்த பார்மில் இல்லை. சர்வதேச போட்டிகளில் அடுத்தடுத்து டக் அவுட் ஆனார். ஐபிஎல் தொடரில் கூட தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதற்கடுத்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இறுதியாக நான் யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். ஏனெனில் அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் நான் மற்றொரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனை தேர்வு செய்கிறேன். அது ஹென்ரிச் க்ளாசென் . ஒரு வெளிநாட்டு வீரர் இந்தியாவில் சுழற்பந்து வீச்சை திறம்பட ஆடுவதை எப்போதாவது தான் பார்க்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com