ஐ.பி.எல். 2024; தில்ஷன் மதுஷன்கா விலகல் - மாற்று வீரரை அறிவித்த மும்பை இந்தியன்ஸ்

வங்காளதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரின் போது தில்ஷன் மதுஷன்கா காயமடைந்தார்.
Image Courtesy: PTI Photo
Image Courtesy: PTI Photo
Published on

சென்னை,

2024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்நிலையில் இந்த சீசனுக்கான ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷன்கா நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகி உள்ளார். வங்காளதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரின் போது காயமடைந்த அவர் முதல் பாதி ஐ.பி.எல் தொடரை தவறவிடுவார் என தகவல் வெளியான நிலையில் தற்போது ஐ.பி.எல் தொடரில் இருந்து முழுவதுமாக விலகி உள்ளார்.

அவருக்கு பதிலாக நடந்து முடிந்த ஜூனியர் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக பந்துவீசிய தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான குவேனா மபகாவை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com