ஐ.பி.எல். 2024; கொல்கத்தா அணியின் பயிற்சி முகாமில் இணைந்தார் மிட்செல் ஸ்டார்க்

2024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது.
Image Courtesy:@KKRiders
Image Courtesy:@KKRiders
Published on

கொல்கத்தா,

2024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட அனைத்து அணிகளும் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு அணியில் உள்ள வீரர்களும் தங்களது பயிற்சி முகாமில் இணைந்த வண்ணம் உள்ளனர்..

இந்நிலையில் ஐ.பி.எல் வரலாற்றில் அதிக தொகைக்கு (ரூ.24.75 கோடி) ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலியா வீரரான மிட்செல் ஸ்டார்க் நேற்று கொல்கத்தா அணியின் பயிற்சி முகாமில் இணைந்துள்ளார். இதனால் கொல்கத்தா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொல்கத்தா அணியின் பயிற்சி முகாமில் ஸ்டார்க் இணைந்ததை அந்த அணி நிர்வாகம் எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் அறிவித்துள்ளது. ஸ்டார்க் இன்று முதல் பயிற்சியில் ஈடுபடுவார் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com