ஐ.பி.எல். 2024; ஷர்துல் தாக்கூரின் வருகை கூடுதல் போனசாக இருக்கும் - பிராவோ பேட்டி

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 22-ந் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.
image courtesy; twitter/ @ChennaiIPL
image courtesy; twitter/ @ChennaiIPL
Published on

சென்னை,

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 22-ந் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மோதுகிறது.

இதற்காக சென்னை வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சென்னை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் வெய்ன் பிராவோ (வெஸ்ட் இண்டீஸ்) நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது,

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வெளிநபர்களின் குறுக்கீடோ அல்லது அணி உரிமையாளர்களின் அழுத்தமோ எதுவும் கிடையாது. வீரர்களை தங்களது இயல்பான நிலையில் இருக்க அனுமதிக்கிறார்கள். சென்னை அணியின் அழகே இது தான்.

எங்களிடம் சிறந்த அணி இருக்கிறது. கடந்த ஐ.பி.எல். போட்டியை எப்படி முடித்தோமோ (வெற்றியுடன்) அதில் இருந்து இந்த சீசனை தொடங்க விரும்புகிறோம். கடந்த முறை இளம் பந்து வீச்சு தாக்குதலை கொண்டு சாதித்தோம்.

குறிப்பாக 'குட்டி மலிங்கா' என்று அழைக்கப்படும் மதீஷா பதிரானா, துஷர் தேஷ்பாண்டே அருமையாக பந்து வீசினர். இந்த தடவை ஷர்துல் தாக்கூரின் வருகை கூடுதல் போனசாக இருக்கும். அனுபவம் வாய்ந்த பவுலர் முஸ்தாபிஜூர் ரகுமானும் இணைகிறார். இவர்களுடன் இணைந்து பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com