ஐ.பி.எல். 2025: டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
Image Courtesy : @IPL
Image Courtesy : @IPL
Published on

புதுடெல்லி,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டி தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு ஆட்டங்கள் அரங்கேறுகின்றன.

இதில் இரவு 7.30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கும் 46-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

டெல்லி அணி 8 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 2 தோல்வியுடன் (மும்பை, குஜராத் அணிகளிடம்) வலுவான நிலையில் உள்ளது. பெங்களூரு அணி 9 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 3 தோல்வி (குஜராத், டெல்லி, பஞ்சாப் அணிகளிடம்) அடைந்துள்ளது.

இந்நிலையில், இன்றைய ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து டெல்லி அணி முதலாவதாக பேட்டிங் செய்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com