ஐ.பி.எல். 2025: குஜராத் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் நியமனம்

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் வரும் 24 மற்றும் 25ம் தேதிகளில் நடக்க இருக்கிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் வரும் 24 மற்றும் 25ம் தேதிகளில் நடக்க இருக்கிறது. அதற்கு முன்பாக தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அணிகள் ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பித்தன. ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஐ.பி.எல்-லில் பங்கேற்கும் 10 அணிகளும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரங்களை அறிவித்துவிட்டன.

ஆச்சரியம் அளிக்கும் வகையில் ரிஷப் பண்ட் (டெல்லி), லோகேஷ் ராகுல் (லக்னோ), ஸ்ரேயஸ் ஐயர் (கொல்கத்தா), அர்ஷ்தீப் சிங் (பஞ்சாப்) போன்ற முன்னணி வீரர்கள் ஏலத்திற்கு வருகின்றனர். இதையடுத்து ஏலத்திற்கு முன்பாகவே பல அணிகளில் பயிற்சியாளர்கள் குழுவில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. டெல்லி, மும்பை, ராஜஸ்தான் உள்ளிட்ட அணிகளில் தலைமை பயிற்சியாளர்கள் மாற்றப்பட்டனர்.

இந்நிலையில், எதிர்வரும் ஐ.பி.எல் தொடருக்காக குஜராத் டைட்டன்ஸ் அணியின் உதவியாளர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் பார்தீவ் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் குஜராத் அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பார்தீவ் படேல் 139 ஐ.பி.எல் போட்டிகளில் ஆடி 2848 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com