ஐ.பி.எல்.2025: களமிறங்கிய முதல் போட்டியிலேயே ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்.. காரணம் என்ன..?


ஐ.பி.எல்.2025: களமிறங்கிய முதல் போட்டியிலேயே ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்.. காரணம் என்ன..?
x

image courtesy:twitter/@IPL

தினத்தந்தி 30 March 2025 1:57 PM IST (Updated: 30 March 2025 2:57 PM IST)
t-max-icont-min-icon

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் - மும்பை அணிகள் மோதின.

அகமதாபாத்,

18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

மும்பை அணியில் தடை காரணமாக கடந்த ஆட்டத்தில் ஆடாத கேப்டன் ஹர்திக் பாண்ட்யா திரும்பினார். இதில் டாஸ் ஜெயித்த மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பீல்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 63 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதனையடுத்து 197 ரன் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 160 ரன்களே எடுத்தது. இதனால் குஜராத் அணி 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 48 ரன்கள் அடித்தார். குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்கவில்லை. இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சீசனில் 3 முறை இதே தவறை செய்ததால் ஒரு போட்டியில் விளையாட தடை பெற்ற ஹர்திக் பாண்ட்யா, நடப்பு சீசனில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே அதே தவறுக்காக மீண்டும் தண்டனை பெற்றுள்ளார்.

1 More update

Next Story