ஐ.பி.எல். 2025: சிறந்த அணியை தேர்வு செய்த சேவாக் - யாருக்கெல்லாம் இடம்..?

ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பையை கைப்பற்றியது.
Image Courtesy: PTI 
Image Courtesy: PTI 
Published on

மும்பை,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த 3-ம் தேதி நிறைவு பெற்றது. இதன் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பையை கைப்பற்றியது.

இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை கொண்டு பல முன்னாள் வீரர்கள் சிறந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்து அறிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் இந்திய முன்னாள் வீரரான சேவாக் தான் தேர்வு செய்த சிறந்த அணியை அறிவித்துள்ளார். இந்த அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக நியமித்துள்ளார்.

சேவாக் தேர்வு செய்த அணி விவரம்: சாய் சுதர்சன், விராட் கோலி, நிக்கோலஸ் பூரன், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ஹென்றிச் கிளாசென், ஜோஷ் ஹேசில்வுட், பிரசித் கிருஷ்ணா, நூர் அகமது, ஜஸ்ப்ரீத் பும்ரா, குல்தீப் யாதவ்.

இம்பேக்ட் வீரர்: ஜித்தேஷ் சர்மா

X

Daily Thanthi
www.dailythanthi.com