“அவர் இல்லையென்றால் பெங்களூரு அணிக்கு சிக்கல்தான்” - பாப் டு பிளஸ்சிஸ்

ஐபிஎல் தொடக்க போட்டிகளில் ஹேசில்வுட் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.
“அவர் இல்லையென்றால் பெங்களூரு அணிக்கு சிக்கல்தான்” - பாப் டு பிளஸ்சிஸ்
Published on

பெங்களூரு,

ஐபிஎல் 2026 சீசன் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளநிலையில், பல வெளிநாட்டு வீரர்கள் தொடரில் இருந்தும் சிலர் துவக்க போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளனர். அதில் ஒருவர் பெங்களூரு அணியின் ஜோஷ் ஹேசில்வுட். கடந்த ஆண்டு நவம்பர் 12-ம் தேதி ஷெபீல்ட் ஷீல்ட் தொடர் போட்டியில் ஹாம்ஸ்ட்ரிங் காயம் அடைந்ததிலிருந்து எந்தப் போட்டியிலும் அவர் விளையாடவில்லை. இதனால், சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையையும் அவர் தவறவிட்டார்.

ஐபிஎல் தொடக்க போட்டிகளிலும் அவர் விளையாடமாட்டார் என்று கூறப்படுகிறது. இது பெங்களூரு அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், பெங்களூரு அணியின் வெற்றி வாய்ப்பு, ஜோஷ் ஹேசில்வுட்டை அதிகமாக சார்ந்துள்ளது என தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் பாப் டூ பிளஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.

Also Read
இந்தியா - தென் ஆப்பிரிக்கா பெண்கள் தொடர்: டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் அட்டவணை வெளியீடு
“அவர் இல்லையென்றால் பெங்களூரு அணிக்கு சிக்கல்தான்” - பாப் டு பிளஸ்சிஸ்

ஹேஸில்வுட் புதிய பந்துடன் பவர் பிளேவில் விக்கெட்டுகள் எடுப்பதிலும், கடைசி ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்துவதிலும் திறமை வாய்ந்தவர் எனவும் அவர் இல்லாதது அணிக்கு பெரிய சிக்கலை உருவாக்கும் எனவும் டு பிளஸ்சிஸ் கூறினார்.

வருகிற 28-ம் தேதி நடைபெறும் ஐபிஎல் 2026 தொடக்கப்போட்டியில் ஐதராபாத், பெங்களூரு அணியை எதிர்கொள்ள உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com