இறுதிப்போட்டியில் தோல்வியே இல்லை... ஐபிஎல்லில் அரிய சாதனை படைத்த வீரர்கள்

ஐபிஎல் இறுதிப்போட்டிகளில் தோல்வி அடையாத வீரர்களின் பட்டியல் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இறுதிப்போட்டியில் தோல்வியே இல்லை... ஐபிஎல்லில் அரிய சாதனை படைத்த வீரர்கள்
Published on

சென்னை,

ஐபிஎல் 2026 சீசன் வருகிற 28 முதல் தொடங்க உள்ள நிலையில், கடந்த 18 சீசன்களில் பல சாதனைகள் உருவாகியுள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்றாக, ஐபிஎல் இறுதிப்போட்டிகளில் ஒருபோதும் தோல்வி அடையாத வீரர்களின் பட்டியல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்த பட்டியலில் முன்னிலையில் இருப்பவர் ரோகித் சர்மா. அவர் ஐபிஎல் இறுதியில் 6 முறை விளையாடி, அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளார். மும்பை அணிக்காக 5 முறை மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக 1 முறை வென்றுள்ளார்.

Also Read
40 போட்டிகள், 0 டக்... ஐபிஎல்லில் அசத்திய தமிழன்
இறுதிப்போட்டியில் தோல்வியே இல்லை... ஐபிஎல்லில் அரிய சாதனை படைத்த வீரர்கள்

அவருக்கு அடுத்ததாக க்ருணால் பாண்ட்யா உள்ளார். அவர் 4 முறை இறுதி போட்டியில் விளையாடி, அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளார். மேலும் பும்ரா மற்றும் சூர்யகுமார் ஆகியோர் 3 முறை இறுதி போட்டியில் விளையாடி, அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த பட்டியலில் குவின்டன் டி காக், ருதுராஜ் கெய்க்வாட், கவுதம் கம்பீர், ஜோஷ் ஹேசல்வுட், இஷான் கிஷன், மிட்செல் மெக்லெனகன், பிரக்யான் ஓஜா, கர்ண் சர்மா, லெண்டல் சிம்மன்ஸ், யஷ் தயால், மொயீன் அலி மற்றும் டக் போலிங்கர் ஆகியோரும் 2 முறை இறுதி போட்டியில் விளையாடி, இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com