ஐ.பி.எல். 2026: 5 வீரர்களை விடுவிக்கும் சென்னை அணி..? - வெளியான தகவல்

கோப்புப்படம்
கடந்த இரண்டு ஐ.பி.எல் சீசன்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாத நிலையில் இருக்கிறது.
சென்னை,
ஐ.பி.எல் 2026-ம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 13-ம் தேதியிலிருந்து 15-ம் தேதிக்குள் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு ஐ.பி.எல் சீசன்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாத நிலையில் இருக்கிறது.
கடைசியாக அந்த அணி 2023-ம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த நிலையில் ஐ.பி.எல் 2026-ம் ஆண்டு சீசனில் எந்த வீரர்களை தக்க வைக்க போகிறோம். எந்த வீரர்களை விடுவிக்கப் போகிறோம் என்ற பட்டியலை நவம்பர் 15-ஆம் தேதிக்குள் பி.சி.சி.ஐ இடம் தெரிவிக்க வேண்டும் என்று செய்தி வெளியாகி உள்ளது.
இதனால் ஒவ்வொரு அணியின் தங்களது அணியில் உள்ள வீரர்களை தக்கவைப்பது விடுவிப்பது குறித்த பட்டியலை ஆராய்ந்து வருகின்றனர். அந்த வகையில் சி.எஸ்.கே அணியில் தீபக் ஹூடா, விஜய் சங்கர், ராகுல் திரிபாதி, சாம் கர்ரன், கான்வே உள்ளிட்ட வீரர்களை சி.எஸ்.கே அணி விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே 9 கோடி 75 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட அஸ்வினும் தற்போது ஓய்வு பெற்றிருப்பதால் சி.எஸ்.கே அணியிடம் கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய்க்கு மேல் பணம் கையிருப்பு இருக்கும் என தெரிகிறது.இதன் மூலம் சி.எஸ்.கே அணி சஞ்சு சாம்சன் உள்ளிட்ட வீரர்களை குறி வைத்து வாங்கலாம். ஏற்கனவே சி.எஸ்.கே அணி பல வீரர்களை காயம் காரணமாக தொடரின் பாதியிலே மாற்றி அணியை பலப்படுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.






