ஐ.பி.எல்.2026: மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த முன்னாள் வீரர்

இர்பான் பதான், ஜஸ்பிரித் பும்ராவை இம்பேக்ட் வீரராக தேர்வு செய்துள்ளார்.
image courtesy:BCCI
image courtesy:BCCI
Published on

மும்பை,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந் தேதி அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த 15-ந் தேதி மாலைக்குள் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

இதன்படி ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 173 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் ரசல், பதிரானா, மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன் போன்ற நட்சத்திர வீரர்களை அணி நிர்வாகங்கள் விடுவித்துள்ளன. இவர்கள் ஏலத்தில் இடம்பெற உள்ளனர். மினி ஏலத்தில் இவர்கள் அதிக தொகைக்கு ஏலம் போவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது பெரும்பாலான வீரர்களை தக்கவைத்து கொண்டது. அத்துடன் ஏலத்திற்கு முன் ஷர்துல் தாகூர் மற்றும் ரூதர்போர்டு ஆகியோரை டிரேடிங் முறையில் வாங்கியுள்ளது. இதனால் அந்த அணி ஏலத்திற்கு முன்பே கிட்டத்தட்ட தங்களது அணியை கட்டமைத்துவிட்டது என்றே சொல்லலாம்.

இந்நிலையில் ஐ.பி.எல். 2026 தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவனை இந்திய முன்னாள் வீரரான இர்பான் பதான் கணித்துள்ளார். அவரது அணியில் ரோகித் சர்மா மற்றும் ரியான் ரிக்கல்டன் ஆகியோரை தொடக்க ஆட்டக்காரர்களாக தேர்வு செய்துள்ளார். அத்துடன் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவை இம்பேக்ட் வீரராக தேர்வு செய்துள்ளார்.

இர்பான் பதான் தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவன் பின்வருமாறு:-

ரோகித் சர்மா, ரியான் ரிக்கல்டன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ஷெர்பேன் ரூதர்போர்டு, நமன் திர், ஷர்துல் தாக்கூர், மிட்செல் சான்ட்னர் அல்லது கார்பின் போஷ், மயங்க் மார்கண்டே, டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா (இம்பேக்ட் பிளேயர்).

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com