ஐபிஎல் 2026 - டிக்கெட் விற்பனை தொடக்கம்... எப்படி வாங்குவது?

ஐபிஎல் டிக்கெட்டுகளை ரசிகர்கள் அதிகாரபூர்வ தளங்கள் மூலமே வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
ஐபிஎல் 2026 - டிக்கெட் விற்பனை தொடக்கம்... எப்படி வாங்குவது?
Published on

சென்னை,

ஐபிஎல் 19வது சீசனுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் தங்கள் பிடித்த அணிகளின் போட்டிகளை நேரடியாக மைதானத்தில் காணத் தயாராகி வருகின்றனர். இந்த ஆண்டில் டிக்கெட் முன்பதிவு முறையில் சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.

புக மை ஷோ (BookMyShow) மூலம் மும்பை, குஜராத், லக்னோ மற்றும் கொல்கத்தா அணிகளின் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை வாங்கலாம். புதியதாக, சோமாட்டோ டிஸ்ட்ரிக்ட் ஆப் (Zomato District App) மூலம் ஐதராபாத், டெல்லி, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளின் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. பேடிஎம் இன்சைடர் (Paytm Insider) வழியாக பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளின் ஹோம் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் தொடர்ந்து கிடைக்கும். மேலும், பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய அணிகள் தங்களது அதிகாரபூர்வ இணையதளங்கள் மூலமும் டிக்கெட் லிங்குகளை வழங்குகின்றன. டிக்கெட் விலை மைதான வசதிகள், இருக்கை இடம், பார்வை போன்றவற்றைப் பொறுத்து மாறுபடும்.

Also Read
ஐகோர்ட்டு சென்ற கம்பீர்... ரூ.2.5 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு - ஏன்?
ஐபிஎல் 2026 - டிக்கெட் விற்பனை தொடக்கம்... எப்படி வாங்குவது?

ஐபிஎல் டிக்கெட்டுகளை ரசிகர்கள் அதிகாரபூர்வ தளங்கள் மூலமே வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. பிளாக் டிக்கெட் அல்லது அனுமதியற்ற இணையதளங்கள் மூலம் வாங்கும் போது ஏமாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சில மைதானங்களில் நேரடி கவுண்டர்களிலும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com