

புது டெல்லி,
இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், விராட் கோலியின் நேற்றைய ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணி 240/4 ரன்கள் குவித்து, மும்பை அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த போட்டியில் கோலி அரைசதம் அடித்திருந்தாலும், அவரது ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருந்தது. இந்நிலையில், இது குறித்து பேசிய ஹர்பஜன் சிங், ’கோலி தனது இன்னிங்ஸில் முழுமையாக திருப்தி அடைந்தது போல தெரியவில்லை. பில் சால்ட் அதிரடியாக விளையாடியதால், கோலியின் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருந்தது. அதே நேரம் அது மற்ற பேட்ஸ்மேன்களை சுதந்திரமாக விளையாட வைத்தது’ என்றார்.
பும்ராவை எதிர்கொள்ளும்போது கோலி மிக கவனமாக ஆடியதாகவும், மற்ற பந்துவீச்சாளர்களிடம் ரன்கள் சேர்த்ததாகவும் கூறினார். மேலும், க்ருணால் பாண்ட்யா பந்துவீச்சு போட்டியின் திருப்புமுனையாக அமைந்ததாகவும் ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.